தினம் ஒரு திருக்குறள்

நாம் உதிர்க்கின்ற வார்த்தைகள் பயனுள்ளவைகளாக மட்டுமே இருக்க வேண்டும். வேண்டாதா, யாருக்கும் பயன் தராத வார்த்தைகளை பேசுவதை விட, பேசாமல் மெளனமாக இருந்து விடுவதே மேலானது. வாயில் இருந்து சொற்கள் உதிர்ந்து விட்ட பிறகு அந்த சொற்கள் தான் நமக்கு எஜமானாகி விடுகிறது.

தினம் ஒரு திருக்குறள்
X

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

மு வரதராசன்:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.

மணக்குடவர் :

சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக.

பரிமேலழகர் :

சொல்லில் பயன் உடைய சொல்லுக. சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.

இரா இளங்குமரனார்:

ஒன்றைச் சொல்ல வேண்டுமிடத்துப் பயனுடைய சொல்லையே சொல்லுக. அவ்வாறு சொல்லுதலில் பயனில்லாச் சொல்லைச் சொல்லாது விடுக.

தினம் ஒரு திருக்குறள்

நாம் உதிர்க்கின்ற வார்த்தைகள் பயனுள்ளவைகளாக மட்டுமே இருக்க வேண்டும். வேண்டாதா, யாருக்கும் பயன் தராத வார்த்தைகளை பேசுவதை விட, பேசாமல் மெளனமாக இருந்து விடுவதே மேலானது. வாயில் இருந்து சொற்கள் உதிர்ந்து விட்ட பிறகு அந்த சொற்கள் தான் நமக்கு எஜமானாகி விடுகிறது.

'சொல்லின் சொல்லுக பயனுடைய' என்கிறது பாடலின் முதற் பகுதி. பேச வேண்டுமானால் பயன் தருவனவற்றை மட்டும் பேசுக என்பது பொருள். தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும் என்ற குறிப்பு இதில் அடங்கியுள்ளது. அதாவது தேவை இல்லாவிட்டால் ஒன்றுமே பேசாமல் இருப்பது நல்லது.

'சொல்லின் பயனிலாச் சொல் சொல்லற்க' எனும் இரண்டம் பகுதி பேசும் சொற்களில் பயன்தராத சொற்களைச் சொல்லவேண்டாம் எனச் சொல்கிறது. மேலும் இவர் பயனிலா என்றதை பயன்நில்லா என்று பிரித்து 'பயனுள்ள சொற்களையே சொல்லுக. சொற்களில் பயன் நிலை பெற்று நில்லாத சொற்களைச் சொல்லாதொழிக' எனவும் கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it