தினம் ஒரு திருக்குறள்!

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். அன்போடு பொருந்தி நின்ற உடலே உயிர் நிலை பெரும் உடம்பாகும். அன்பில்லாதவர் உடல் எலும்பைத் தோலால் மூடப்பெற்ற எலும்புக்கூடே ஆகும். ஆதலால், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவோம்.

தினம் ஒரு திருக்குறள்!
X

குறள்


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

தினம் ஒரு திருக்குறள்!

மு.வரதராசன் :

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

சாலமன் பாப்பையா:

அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.

சிவயோகி சிவக்குமார் :

அன்பின் பாதையே உயிரின் தன்மை,அன்பில்லாதவர்களுக்கு எலும்பு மேல் போர்த்திய தோல் போன்றதே உடம்பு.

தினம் ஒரு திருக்குறள்!

அன்போடு பொருந்தி நின்ற உடலே உயிர் நிலை பெரும் உடம்பாகும். அன்பில்லாதவர் உடல் எலும்பைத் தோலால் மூடப்பெற்ற எலும்புக்கூடே ஆகும். ஆதலால், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவோம்.

newstm.in

Tags:
Next Story
Share it