1. Home
  2. தமிழ்நாடு

காதலனுக்காக இளவரசி பட்டத்தை துறந்தார் ஜப்பானிய இளவரசர் மகள் !!

காதலனுக்காக இளவரசி பட்டத்தை துறந்தார் ஜப்பானிய இளவரசர் மகள் !!

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி மகோ இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்துகொண்டனர். 2018ஆம் ஆண்டில் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்திருந்தனர். ஆனால் கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

காதலனுக்காக இளவரசி பட்டத்தை துறந்தார் ஜப்பானிய இளவரசர் மகள் !!

இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது. தற்போது இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதையடுத்து இளவரசி மகோவும் அமெரிக்காவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சாதாரண மக்களைப்போல் எளிய முறையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்துக்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 29 வயதான மகோ திருமணம் செய்தபின்னர் இளவரசி என்ற பட்டத்தை இழந்துள்ளார்.

அதாவது, ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். எனினும் கல்லூரி காதலனை திருமணம் செய்ய ஜப்பானிய இளவரசி மாகோ தனது அரசு பட்டத்தை துறந்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like