அன்று டீக்கடை வியாபாரியின் மகள்... இன்று விமானப்படை அதிகாரி!

அன்று டீக்கடை வியாபாரியின் மகள்... இன்று விமானப்படை அதிகாரி!

அன்று டீக்கடை வியாபாரியின் மகள்... இன்று விமானப்படை அதிகாரி!
X

டீக்கடை வியாபாரியின் மகள் ஒருவர் தன்னுடைய விடாமுயற்சியால் இந்திய விமானப்படையில் விமானியாக மாறி தனது கனவை சாத்தியமாக்கிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் டீ கடை வைத்திருந்தார் அஞ்சல் கங்வாலின் தந்தையான சுரேஷ் கங்வால். கேதர்நாத் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போது விமானப்படை அதிகாரிகள் மக்களை துணிச்சலாக மீட்டனர். அந்தச் சம்பவம் அஞ்சல் கங்வால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. தானும் இதே போல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று எண்ணி விமானப் படை அதிகாரியாக மாற வேண்டும் என்றக் கனவை கையில் எடுத்தார் அஞ்சல். தந்தையின் ஒத்துழைப்பாலும், தனது விடாமுயற்சியாலும் கிட்டத்தட்ட 4 முறை விமான அதிகாரிக்கான தேர்வில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் முயற்சித்து தற்போது விமானப்படை அதிகாரியாக வானில் பறக்கத் தயாராகி விட்டார். விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்து இந்தப் பெண் சிறந்த உதாரணம்.

newstm.in

Next Story
Share it