அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம்

 | 

வெப்பச் சலனம் காரணமாக கோவை , தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் , கோவை , தர்மபுரி , சேலம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 1 முதல் ஜூலை 5 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளது.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP