10 ரூபாய் ஜூஸ் குடித்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி.. மருத்துவமனையில் தீவிரம் !!

 | 

திண்டுக்கல் அனுமந்தநகரை பகுதியில் தினேஷ்- மேனகா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது பிரதீப் என்ற 12 வயது உள்ளான். பிரதீப் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்பேது பள்ளிகள் திறக்காததால் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்.

இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் ரூ.10க்கு தனியார் நிறுவன குளிர்பான பாட்டில் ஒன்றை பிரதீப் வாங்கினான். அந்த பாட்டிலை சரியாக பார்க்காமல், வீட்டுக்கு வந்து அந்த குளிர்பானத்தை சிறுவன் அருந்தியுள்ளான். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

juice

அதாவது, அந்த பாட்டிலுக்குள் குளிர்பானத்தில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது. குளிர்பானத்தை குடித்து முடித்தபின்னர் தனது தாயிடம் குளிர்பானத்தில் பல்லி இறந்து கிடப்பதாகவும், அதனை குடித்து விட்டதாக அவன் கூறினான். சற்று நேரத்தில் வீட்டில் பிரதீப் மயங்கி விழுந்ததால் அவனுடைய தாய் அதிர்ச்சி அடைந்தார். 

உடனே அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் அந்த குளிர்பான நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in


 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP