1. Home
  2. தமிழ்நாடு

இன்று வானில் நிகழ இருக்கும் “ரத்த நிலவு” அதிசயம்!

இன்று வானில் நிகழ இருக்கும் “ரத்த நிலவு” அதிசயம்!


சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும் போது, நிலவுக்கு கிடைக்க கூடிய ஒளியை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பௌர்ணமி நாளான இன்று நிகழவுள்ளது.

சந்திர கிரகணத்தை இந்தியாவில் பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் காண முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது நீண்ட சந்திர கிரகணமாக அமையும் என்று தெரிகிறது.இந்தியாவில் கொல்கத்தாவில் மாலை 6.15 முதல் 6.22 வரை மட்டுமே இந்த சந்திர கிரகணத்தை காணலாம். சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் முழு சந்திர கிரகணம் தெரியாது, பகுதியளவு மட்டுமே காண முடியும்.அதே நேரத்தில் ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட ஆப்ரிக்கா நாடுகள், மேற்கு ஆப்ரிக்க நாடுகள், தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

சந்திரகிரகணத்தின் போது, நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வருகிறது. அப்போது பூமியின் நிழல் முழுவதும் நிலவை மறைக்கிறது. முற்றிலும் மறைந்து, பூமி நகரும்போது சூரிய கதிர் நிலவின் விளிம்பில் பட்டும்போது, ரத்தச் சிவப்பு நிறத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, பூமியின் விளிம்பில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியும், நிலவில் விழும் சூரிய ஒளியும் இணைந்து இந்த இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே ரத்தச் சிவப்பாக மாறுகிறது. இதனை ஆங்கிலத்தில் Blood Moon என்று கூறுகின்றனர்.


இந்த வான் நிகழ்வை நம் வெறுங்கண்ணால் பார்க்க முடியும் என்றாலும், தமிழகத்தில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like