1. Home
  2. தமிழ்நாடு

வாட்ஸ் அப்பில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்!

வாட்ஸ் அப்பில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்!


வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல மாற்றங்களும், அப்டேட்களும் கொண்டு வரப்பட்டன. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராமையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் இவை மூன்றையும் இணைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

ஒரு பயனாளர் ஒரே நேரத்தில் மூன்றிலும் இணைந்திருக்கலாம். இன்ஸ்டாவில் இருந்து ஃபேஸ்புக்கில் இருப்பவருக்கு சாட் செய்யலாம். வாட்ஸ் அப்பில் இருந்து மெசஞ்சரில் ஃபேஸ்புக் பயனாளருடன் சாட் செய்யலாம். அதேபோல் வாட்ஸ் அப்பில் ஒருவரை பிளாக் செய்தால் அவர் ஃபேஸ்புக் இன்ஸ்டா என அனைத்திலும் பிளாக் ஆகிவிடுவார். இது பயனாளர்களை எளிதாக இணைக்க உதவும் என ஃபேஸ்புக் தெரிவிக்கிறது. 


அதாவது ஒருவர் வாட்ஸ்அப் மட்டும் வைத்துள்ளார். மற்றொருவர் ஃபேஸ்புக்கில் மட்டும் இருக்கிறார். அப்படி என்றாலும் இருவரும் சேட் செய்து இணைந்திருக்கும் வசதியை இது கொடுக்கிறது. அதன்படி முதலில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக்கை இணைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இன்ஸ்டா, ஃபேஸ்புக்கை இணைக்கவும் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like