மணப்பெண் தோழியை ஏழு பேர் சேர்ந்து நாசம் செய்த கொடூரம்!

மணப்பெண் தோழியை ஏழு பேர் சேர்ந்து நாசம் செய்த கொடூரம்!

மணப்பெண் தோழியை ஏழு பேர் சேர்ந்து நாசம் செய்த கொடூரம்!
X

திருமண வீட்டில் மணப்பெண்ணின் தோழியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததை
அடுத்து அவர்
தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகாவ்ன் மாவட்டத்தில் வசிக்கும் 20 வயது பெண் ஒருவர், தன்னுடைய தோழியின் திருமணத்திற்காக சென்றிருந்தார்.

அப்போது அன்றிரவு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மண்டபத்துக்கு வெளியே தனியாக நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணை கல்யாணத்திற்கு வந்த 7 வாலிபர்கள் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.

பிறகு இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம் என அந்த 7 பேரும் மிரட்டியுள்ளனர். மறுநாள் வீட்டிற்கு வந்த அந்த பெண் தனக்கு நடந்ததை தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார்.இந்நிலையில் அவமானம் தாங்க முடியாமல் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அவர்களின் நடவடிக்கையில் திருப்தியில்லாமல் இருந்தார்.

இதனால் அவர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் அவரை சந்தித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதியளித்து சமாதானம் செய்தனர். வன்கொடுமை தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்

மேலும் இறந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

newstm.in

Next Story
Share it