1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கில் உணவு, இடம் கொடுத்த மக்களுக்கு வெளி மாநில தொழிலாளர்கள் செய்த நன்றி கடன்!

ஊரடங்கில் உணவு, இடம் கொடுத்த மக்களுக்கு வெளி மாநில தொழிலாளர்கள் செய்த நன்றி கடன்!


ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் தங்களை தங்க வைத்து உணவு அளித்த கிராம வாசிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் பள்ளிக்கு வெள்ளை அடித்துக்கொடுத்து நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர். 

சிகார் மாவட்டம் பல்சானா என்னும் பகுதியில் மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் அதே ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குக் கிராம் மக்கள் ஒன்றிணைந்து உணவு வசதிகள் செய்த தந்தனர். 


இதனையடுத்து தங்களுக்கு இடம், உணவு அளித்த மக்களுக்கு நன்றி கடனாக அவர்கள் தங்கியுள்ள பள்ளிக் கட்டிடம் முழுவதும் வெள்ளை அடித்துக் கொடுத்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

Trending News

Latest News

You May Like