பயங்கர தீ விபத்து !! இயந்திரங்கள் , பஞ்சு மூட்டைகள் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்...

X

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.இவருக்கு சொந்தமான பஞ்சு நூற்பாலை அதே பகுதியில் உள்ளது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நூற்பாலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்பொழுது இயந்திரத்தில் இருந்து தீயுடன் புகை வந்தது. அதனை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நூற்பாலையை விட்டு வெளியே வந்தனர்.

இதனை அடுத்து உரிமையாளர் நடராஜனுக்கும், பல்லடம் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும் சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சுவற்றை இடித்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it