காட்பாடி அருகே பரபரப்பு..! கழன்று ஓடிய ரயில் என்ஜின் - பயணிகள் அதிர்ச்சி..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்த 'விவேக் எக்ஸ்பிரஸ்' ரயிலின் இன்ஜின் பெட்டி தனியாக கழண்டது.இன்ஜினையும் ரயில் பெட்டிகளையும் இணைக்கும் கப்ளிங் கழண்டு சென்றதால் ரயில் நின்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு பெட்டிகளோடு இணைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் பாதி வழியில் நிற்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த மார்க்கத்தில் செல்லும் இதர ரயில்கள் ஆங்காங்கே நடுவழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காட்பாடி அருகே விரைவு ரயிலில் தனியாக கழன்று சென்ற என்ஜினால் பரபரப்பு!
— Tamil Nadu Rail Info | தமிழக ரெயில் தகவல் (@TN_RailNews) October 25, 2024
அசாம் மாநிலம் தீப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் என்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்கும் கப்லிங் உடைந்ததால் ஒருமணி நேரமாக தனியாக நிற்கும் ரயில் பெட்டிகள் pic.twitter.com/sEjhwIjgp9