1. Home
  2. தமிழ்நாடு

டெலிகிராம் & X நிறுவனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

1

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்குவது தொடர்பாக youtube, டெலிகிராம் மற்றும் X (ட்விட்டர்) ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த தளங்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இந்தியாவில் நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவின்படி இத்தளங்கள் உடனடியாக செயல்பட தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79 இன் கீழ் டெலிகிராம், Youtube மற்றும் எக்ஸ் தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்படும் என்றும், இது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் இதற்காக உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like