ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய இளைஞர் !!

ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய இளைஞர் !!

ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய இளைஞர் !!
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் சுஜின் (எ) காசி (26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் ரகசிய புகார் ஒன்றை அளித்தார். 

இதனையடுத்து கோட்டாறு போலீசார் தீவிர விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுஜின் என்ற காசி சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்களை முகநூல் மூலமாகவும் நேரிலும் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பழகி அவர்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து வைத்துக்கொண்டு பல பெண்களிடம் இலட்சக்கணக்கான ரூபாய் பறித்ததாக பெண் டாக்டரின் புகாரின் அடிப்படையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுஜின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Newstm.in

Next Story
Share it