வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 | 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலங்குடியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரின் மகள் புவனேஸ்வரி (25) பழைய ஆற்காடு பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரும் தான் திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் திருமணமான நாள் முதலே ரெங்கராஜ், வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென  புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த, அவரது உறவினர்கள் புவனேஸ்வரி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றம்சாட்டினர். அதனைத் தொடர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பெண்ணின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புவனேஸ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஒரே ஆண்டில் பெண் உயிரிழந்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP