50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வங்கிக்கு சென்ற டீ கடைக்காரர் !! வங்கி அதிகாரி சொன்ன தகவல் இடியாய் விழுந்தது...

50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வங்கிக்கு சென்ற டீ கடைக்காரர் !! வங்கி அதிகாரி சொன்ன தகவல் இடியாய் விழுந்தது...

50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வங்கிக்கு சென்ற டீ கடைக்காரர் !! வங்கி அதிகாரி சொன்ன தகவல் இடியாய் விழுந்தது...
X

ராஜ்குமார் என்பவர் குருஷேத்ராவில் வசித்து வருகிறார். இவர் டீக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக டீக்கடை திறக்காமல் போனதால், அவரது வாழ்வாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

இதனால், அவர் அங்கிருந்த வங்கி  ஒன்றில் 50 ஆயிரம் ரூபாய் கடன் கோரி உள்ளார். இதனையடுத்து, ராஜ்குமாரின் அக்கௌன்ட் நம்பரை கொண்டு அவரது விவரங்களை பரிசோதித்த வங்கி ஊழியர்கள், 50 கோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு , 16 வகையான கடன்களை வாங்கி விட்டு, இதுவரை செலுத்தவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், வாங்கிய கடன்களையே செலுத்தாத போது, மீண்டும் எவ்வாறு கடன் கொடுக்க முடியும் என்று வங்கி ஊழியர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதனை கேட்டதும் ராஜ்குமார் பேரதிர்ச்சி அடைந்தார்.

இதுவரை நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கியதே கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இதனால், வங்கி நிர்வாகிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அனைத்து தரப்பினருக்கும் இடையே பெரும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.

அதாவது, சாதாரண டீக்கடைக்காரரான இவர் எப்படி? 51 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்க முடியும் ?  எனவே இது அநியாயத்தின் உச்சம் என்று பலரும் விமர்சித்துள்ளனர். பணக்காரர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் வங்கிகள் இதுபோன்ற அப்பாவிகளுக்கு உதவ மறுப்பது ஏன் ? என்றும் பல தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Newstm.in

Next Story
Share it