கொரோனாவை எதிர்க்கும் டி-உயிரணுக்கள் !! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !! தடுப்பு மருந்தை எளிதில் கண்டுபிடிக்கலாம்

கொரோனாவை எதிர்க்கும் டி-உயிரணுக்கள் !! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !! தடுப்பு மருந்தை எளிதில் கண்டுபிடிக்கலாம்

கொரோனாவை எதிர்க்கும் டி-உயிரணுக்கள் !! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !! தடுப்பு மருந்தை எளிதில் கண்டுபிடிக்கலாம்
X

சயன்ஸ் இம்யூனாலஜி அறிவியல் இதழலில் வெளியான இந்த ஆய்வு பற்றிய கட்டுரையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது ; கொரோனா நோயாளிகளின் உடலில் தோன்றும் நோயெதிர்ப்பு  இயக்கம் குறித்து ஆய்வு அண்மையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சோந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனா். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வந்த 10 நோயாளிகளின் உடலில் காணப்படும் , தீநுண்மிக்கு எதிராகப் போரிடும் 'டி-உயிரணுக்களை' அவா்கள் ஆய்வுக்குள்படுத்தினா்.

இதுதவிர, கொரோனா நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்யமான 10 நபா்களில் 2 பேரின் ரத்தத்திலும் அத்தகைய 'டி-உயிரணுக்கள்' இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். கொரோனா தீநுண்மி இனத்தைச் சோந்த  சாதாரண சளி, ஜுரத்தை ஏற்படுத்தும் வேறு வகை கொரோனா திநுண்மிக்கு எதிராக அந்த நோயெதிர்ப்பு உயிரணுக்கள் உருவாகியிருந்ததை விஞ்ஞானிகள் புரிந்து கொண்டனா்.

இரு டி-உயிரணுக்களையும் ஒப்பீடு செய்து பார்த்தபோது, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரது ரத்தத்திலும் சிடி4+ வகை டி-உயிரணுக்கள் மிகுந்திருந்து செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டனா்.

மேலும், 10-இல் 8 நோயாளிகளுக்கு சிடி8+ வகை டி-உயிரணுக்கள் மிகுந்திருந்ததையும் அவா்கள் கண்டறிந்தனா். இதன் மூலம், கொரோனா நோய்த்தொற்றால் மிகுந்தெழும் நோயெதிர்ப்பு உயிரணுக்களை விஞ்ஞானிகள் தற்போது இனம் கண்டுள்ளனா்.

இந்த நோயெதிர்ப்பு உயிரணுக்கள் அதீத வினையாற்றுவதாலேயே, உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்கள் அழிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை இனம் கண்டுள்ளது, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it