டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்து.. ஆறாக ஓடிய பீர்.. அள்ளிச்சென்ற பொதுமக்கள்..!

 | 

சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக தர்மபுரி நோக்கி டாஸ்மாக் மது பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த தனுஷ் (42) என்பவர் ஓட்டினார். கிளீனராக இளையராஜா (38) என்பவர் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த பீர் பாட்டில்களில் பெரும்பாலானவை உடைந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பீர் பாட்டில்கள் உடைந்து ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக சென்ற சிலர், லாரியில் மீதமிருந்த பீர் பாட்டில்களை வேக வேகமாக அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அங்கிருந்த குடிமகன்கள் சிலர், இதனை சாதகமாக பயன்படுத்தி பீர் பாட்டில்களை எடுத்து கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதைப் பார்த்து அங்கு நின்ற சிலர் திகைத்துப்போய் நின்றனர்.

இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் லாரியில் இருந்த பீர் பாட்டில்களை அள்ளியவர்களை விரட்டியடித்தனர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP