டாஸ்மாக் ஊழியர் படுகொலை: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

 | 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கடந்த 4ம் தேதி இரவு, டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் 2 பேர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் வெட்டிக்கொலை ; டாஸ்மாக் கடைகளை மூடி  ஊழியர்கள் போராட்டம்
அப்போது, மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில், டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்தார்; படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 5ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் டாஸ்மாக் ஊழியர் கொலை: மதுரையில் ஆர்ப்பாட்டம் | Tasmag members  protest in Madurai condemning the murder of a Tasmac employee in Kanchipuram .
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கொள்ளையர்கள் தாக்குதலால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP