ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு !! ஐ.சி.எம்.ஆர்

ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு !! ஐ.சி.எம்.ஆர்

ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு !! ஐ.சி.எம்.ஆர்
X

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,985,656 பேர் உள்ளனர். மேலும் 5,24,088 பேர் இந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். 6,140,827 பேர் சிகிச்சை பெற்று வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக மக்களை ஆட்டிப்படைக்கும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் முதல்கட்ட பணியில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிவேகத்தில் பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரானாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,225 பேரை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மொத்த 6,27,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் 379,902 பேர் குணமாடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்த வரை இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் ஐசிஎம்ஆர் , பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபுடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதாவது ஜூலை 7-ம் தேதிக்குள் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை விரிவுபடுத்த வலியுறுத்தியுள்ளது.

மேலும் சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15-ம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஐசிஎம்ஆர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it