தயார் நிலையில் தமிழகம்.. கொரோனாவை எதிர்கொள்ள 2-ஆம் உலகப்போர் யுக்தி.!

தயார் நிலையில் தமிழகம்.. கொரோனாவை எதிர்கொள்ள 2-ஆம் உலகப்போர் யுக்தி.!

தயார் நிலையில் தமிழகம்.. கொரோனாவை எதிர்கொள்ள 2-ஆம் உலகப்போர் யுக்தி.!
X

இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. தமிழகம் அதிலிருந்து சற்று வித்தியாசமாக இரண்டாம் உலகப் போரின் உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது.

அதன்படி மருத்துவம் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டினாலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் தன்னிறைவாகவே உருவாக்க முடியும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1939 - 45 காலகட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது ஜர்மனி, இத்தாலி, ஜப்பானை உள்ளடக்கிய அச்சு நாடுகள் அணிதான் முதலில் பல இடங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தின. இதனால், பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் (ரஷியா) அடங்கிய நேச நாடுகள் அணி சற்று பின்னடைவைச் சந்தித்தன.

இதைத் தொடா்ந்து போரின் பிற்பாதியில் சில உத்திகளை நேச நாடுகள் முன்னெடுத்தன. குறிப்பாக, சோவியத் யூனியனில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், குடியிருப்புப் பகுதிகளும், ராணுவத் தளவாட உற்பத்தி மையங்களாக மாற்றப்பட்டன. அங்கு நடைபெறும் மொத்த உற்பத்தியும் பாதுகாப்புத் துறை சார்ந்தே இருந்தது. இதனால் நேச நாடுகளின் ஆயுத வலிமை அதிகரித்ததும், அது, போரில் அவா்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்ததும் வரலாற்றில் பதியப்பட்ட உண்மைகள்.

இந்நிலையில், தற்போது கொரோனாவுக்கு எதிரான போரிலும் அதுபோன்ற உத்திகளைப் பின்பற்ற தமிழகம் முடிவு செய்துள்ளது. ஆனால், இம்முறை ராணுவத் தளவாடத்துக்கு பதிலாக, உயிர் காக்கும் மருத்துவப் பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

 மருந்துகளை போன்று மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டில்கள், மெத்தைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி, பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களில் மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனை பயன்பாட்டுக்கான பொருள்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிக அளவில் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.

மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு

வெண்டிலேட்டா்கள்

  • அரசு மருத்துவமனைகள் - 2,501
  • தனியார் மருத்துவமனைகள் - 870
  • மொத்தம் - 3,371

முகக்கவசங்கள்

  • மூன்றடுக்கு கவசம் - 65 லட்சம்
  • என்-95 - 3 லட்சம்
  • மருத்துவத் துறையினருக்கான பாதுகாப்பு கவசங்கள் - 2 லட்சம்
  • கரோனா ஆய்வுக்காக பிசிஆா் உபகரணம் - 1.95 லட்சம்
  • துரிதப் பரிசோதனை உபகரணம் - 24 ஆயிரம்

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஸித்ரோமைசின், பாராசிட்டமால் போன்ற மருந்துகளை அதிக அளவில் தயாரிக்க மருந்து உற்பத்தியாளா்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அந்த மருந்துகள் வழக்கத்தைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதனால், மருந்து பொருட்கள், கிருமி நாசினி, மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

newstm.in 

Next Story
Share it