தமிழகத்தில் 12 - ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேதி அறிவிப்பு !!

தமிழகத்தில் 12 - ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேதி அறிவிப்பு !!

தமிழகத்தில் 12 - ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேதி அறிவிப்பு !!
X

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 82,275ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதும் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே , அரசு தரப்பில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில் 10 ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வந்த வேண்டுகோளஒ ஏற்று தமிழக அரசு தேர்வை ரத்து செய்தது.

இதனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வி வந்த நிலையில் , பருவ தேர்வுகளை வைத்து மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

அதன் பின்பு மதிப்பெண்கள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் , வரும் ஜூலை 6 ம் தேதி 12 ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newstm.in

Next Story
Share it