மதுரை மல்லி விற்று துபாயை தெறிக்கவிடும் தமிழக வியாபாரி!!

 | 

மதுரை மல்லி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தமிழகத்தை சேர்ந்த ஒருவர் விற்பனை செய்து வருகிறார்.

தமிழகத்தை சேர்ந்த பெருமாள் 32 ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஒரு மலர் கடை தொடங்கி தற்போது 189 கிளைகளை நடத்தி வருகிறார். 2017இல் மதுரை விமான நிலையத்தில் மதுரை-துபாய் சர்வதேச சரக்கு போக்குவரத்து தொடங்கிய போது முதல் சரக்காக மதுரை மல்லி உள்ளிட்ட 300 கிலோ மலர்களை துபாய்க்கு இவர் ஏற்றுமதி செய்தார்.

தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரும் இந்த மல்லி இரண்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும். ஆனால் அதற்குள் விற்று தீர்ந்து விடுகிறது என்று பெருமாள் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நாளொன்றுக்கு மதுரை மல்லி மட்டும் 500 கிலோ இறக்குமதி செய்யப்படுகிறது.

perumal 1

இது தவிர்த்து மற்ற மலர்களும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் தென்மாவட்டங்களில் தொழில் வாய்ப்பு அதிகரிக்கும் என்று பெருமாள் தெரிவித்துள்ளார்.

மதுரை மல்லிக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு உள்ளது. எனவே தமிழக அரசும், இந்திய அரசும் இணைந்து மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தி கூடுதல் விமானங்களை இயக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் தற்போது வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு நல வாரியம் அமைத்துள்ளார். இதன் மூலம் பல்வேறு வாய்ப்பு பெருகும். இதனை செயல்படுத்த உள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக பெருமாள் கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP