1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு துணிச்சல் முடிவு! 32,500 ஆசிரியர்களுக்கும் செப் மாத சம்பளம் விடுவிப்பு...!

1

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான  ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்பட்டது. நிதியை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசு பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 4 தவணையாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிலும் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள்

இந்த நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி செப்டம்பர் மாத ஊதியத்தை மாநில அரசு வழங்காமல் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூட.. தமிழ்நாடு முழுக்க 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like