ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி !! எது இயங்கலாம் ?

ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி !! எது இயங்கலாம் ?

ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி !! எது இயங்கலாம் ?
X

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு தளர்வு அளிப்பது மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.

கொரோனா பாதிப்பு உயர்வு காரணமாக, தமிழக அரசு ஊரடங்கு முடியும் வரை தளர்வுகள் அளிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் அதிபர்களுடன் காணொளி வாயிலாக இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு சில முக்கிய விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகளில் எந்த ஆலைகள் இயங்கலாம் என்ற  விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ரசாயன ஆலைகள், கரும்பு மற்றும் காகித ஆலைகள், கண்ணாடி, டயர் ஆலைகள், சிமெண்ட், கம்பி, பெயிண்ட் உள்ளிட்ட ஆலைகள் இயங்கலாம் என்று அனுமதி தந்துள்ளது. அதே நேரத்தில் ஊழியர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it