1. Home
  2. தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

1

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் பொருட்டு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படுவது குறித்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இவை கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்பட்டன. 

முன்னதாக, தீர்மானம் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பதிலளித்துப் பேசினர்.  தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like