சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்... பிரபல நடிகையின் அதிரடி முடிவு!

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்... பிரபல நடிகையின் அதிரடி முடிவு!

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்... பிரபல நடிகையின் அதிரடி முடிவு!
X

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தான் வெளியிட்ட கருத்துகளை நிரூபிக்க முடியாவிட்டால் தனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் எதையும் வெளிடக்கூடிய ஆள் நான் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், நான் பேசிய வீடியோவை பார்த்த மும்பை போலீஸார், அதுகுறித்து விசாரிக்க என்னை அழைத்தனர். நான் மணாலியில் இருந்ததால் எனது அறிக்கையை பெற யாரையாவது அனுப்புங்கள் எனக் கூறினேன். ஆனால் அதன்பிறகு என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்னால் நிரூபிக்க முடியாத ஒன்று குறித்து நான் பொதுவெளியில் நான் பேசமாட்டேன். அப்படி என்னால் நிரூபிக்க முடியாவிட்டால் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன். நான் அதற்கு தகுதியற்றவளாகக் கருதிக் கொள்வேன் என்று கோபமாக பேசியுள்ளார். 

newstm.in

Next Story
Share it