சூர்யா பிறந்தநாள் பரிசாக வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

சூர்யா பிறந்தநாள் பரிசாக வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

சூர்யா பிறந்தநாள் பரிசாக வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
X

நடிகர் சூர்யா சூரரை போற்று படத்தை தற்போது நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. அதைத்தொடர்ந்து வெற்றி இயக்குனரான வெற்றிமாறனுடன் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஏற்கனவே ஜிவி பிரகாஷ் இசையமைத்து சூர்யா பாடிய பருந்தாகுது ஊர்க்குருவி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . அதுமட்டுமின்றி அந்த பாடல் வைரல் ஆகியது. 

அசுரன் படத்திற்கு பிறகு சூர்யாவும் வெற்றிமாறனும் இணையும் இந்த கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்று சூர்யாவின் 45 ஆவது பிறந்த நாள். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் எல்லோரும் சூர்யாவை வாழ்த்தி வருகின்றனர். 

இன்று சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தில் இருந்து காட்டுப் பயலே என்ற பாடலும் ஒரு நிமிட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்பது போல வாடிவாசல்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. 

இது சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம் அந்த ஃபர்ஸ்ட் லுக்கை இணையதளத்தில் சூர்யா ரசிகர்கள் வைரலாகி கொண்டிருக்கிறார்கள்...

அந்த ஃபர்ஸ்ட் லுக் இதோ உங்களுக்காக...

Next Story
Share it