1. Home
  2. தமிழ்நாடு

மேடையில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா! கலங்கடித்த மாணவியின் பேச்சு!!

மேடையில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா! கலங்கடித்த மாணவியின் பேச்சு!!

"சூர்யா அண்ணன் வருகிறார், அவர் முன்னாடி பேச போகிறேன் என்று சொன்னேன், கூலி வேலையை விட்டுட்டு எங்கமாவால வர முடியலை. ஆனா நீ பேசும் போது போன் பண்ணு நான் வர முடியாவிட்டாலும் நான் செல்போன்ல உன்னுடைய பேச்சைக் கேட்டுக்கறேன் என்று சொன்னார்" என்று மாணவி பேசப் பேச மேடையில் அமர்ந்திருந்த நடிகர் சூர்யா கண்கலங்கினார்.

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் "வித்தியாசம்தான் அழகு", "உலகம் பிறந்தது நமக்காக" என்ற நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் சூர்யா உட்படப் பலரும் கலந்துக் கொண்டனர்.

விழாவில் அகரம் அறக்கட்டளை மூலம் தனது கல்வி கனவு நிறைவேறியது பற்றி ஏழை மாணவி காயத்திரியின் இயல்பான, உருக்கமான பேச்சு அனைவரையும் நிலை க் குலையச் செய்தது.

மாணவி பேசும் போது "என் பெயர் காயத்திரி, தஞ்சை மாவட்டத்தில் நெய்வாசல் என்ற சின்ன கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா கேரளாவில் கூலித் தொழிலாளி, அம்மாவும் கூலித் தொழிலாளி தான். அரசுப் பள்ளியில் தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். குடும்ப வறுமையால் மேல் படிப்பு படிக்க முடியவில்லை. பின்னர் அகரம் மூலமாகப் பட்ட படிப்பு முடித்தேன். ஒரு நாள் வீட்டிற்குப் பேயிருந்தேன். அப்பாவிற்கு கேன்சர் என்பதால் தனிமைப் படுத்தப்பட்டார். அப்ப வீட்டிற்குள் வந்த அவர் கேன்சர் தலைவரை வந்து விட்டது. வலி தாங்காமல் தூங்கு போட்டுகலாம்னு பேன் கிட்டப் போனேன். அப்பத் தான் அங்க படுத்திருக்கிற தம்பி எழுந்து பார்த்தா பயந்துடுவான்னு தூங்கு போட்டுக்கலை என்று சொல்லி அழுதார். இது தான் அவர் என்கிட்ட கடைசியா பேசினது.

பின்னர் அப்பாவின் மரணசெய்தி கேட்டு ஊருக்குப் போனேன். அப்பா எப்படி இறந்தாருன்று ஊர்காரங்க சொல்லிச் சொல்லி அழுதாங்க. அது என்னனா அப்பா ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்திருக்கிறார். அம்மா அதை ஒவ்வொரு பாத்திரத்தில் பிடித்து வைதிருக்காங்க. அப்ப மேலும் பாத்திரம் இல்லாததால் கையில் பிடித்திருக்கிறார்கள் அம்மா. இதைச் சொல்லிச் சொல்லி ஊர்காரங்க எல்லாரும் அழுதாங்க. இப்படிக் கஷ்டப்பட்டு அம்மா உன்னை படிக்கவைக்கிறா இனி நீதான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்கள். பின்னர் அம்மாவுக்கு கர்ப பையில கட்டி. அதையும் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தோம். அப்பத்தான் என்னடா இது வாழ்க்கை இதுன்னு தோணுச்சு. இப்படிக் கஷ்டப்பட்டு படிச்சி இன்றைக்கு நல்ல வேலையில இருக்கேன்.

தூரத்தில் நிற்கிறது என் பொண்ணு தான்னு தெரிஞ்சாலும் வந்த அனைத்து பேச இன்னைக்கு அப்பா என்கூட இல்லை. ஆனாலும் நான் படிச்ச கல்வி எனக்கு இருக்கு. இன்னைக்கு இந்த விழாவிற்கு போறேன். சூர்யா அண்ணன் வர்றாரு. அவர் முன்னாடி பேச போகிறேன் என்று சொன்னேன். கூலி வேலையை விட்டு எங்கமாவால வர முடியலை. ஆனால் நீ பேசும் போது போன் பண்ணு நான் வர முடியாவிட்டாலும் நான் செல்போன்ல கேட்கிறேன் என்று சொன்னார். இப்படி அந்த மாணவியின் உருக்கமான பேச்சு நடிகர் சூர்யாவை கண்கலங்க வைத்து விட்டது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like