பேரருள் உண்டாக.. அபிராமியை சரணடையுங்கள்! அபிராமி அந்தாதி!

பேரருள் உண்டாக.. அபிராமியை சரணடையுங்கள்! அபிராமி அந்தாதி!

பேரருள் உண்டாக.. அபிராமியை சரணடையுங்கள்! அபிராமி அந்தாதி!
X

பாடல்

கருத்தன, எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும் செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தன மூரலும், நீயும் அம்மே! வந்து என்முன் நிற்கவே.

பொருள்

தாயே எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும் திருவிழிகளில் உள்ளனவும் அழுத திருஞான சம்பந்த பிள்ளையாருக்கு பாலை வழங்கி திருவருள் மிகுந்த அழகிய மார்பும் அவற்றின் மேல் உள்ள முத்து மாலையும் , சிவந்த திருக்கரத்தில் உள்ள கரும்பு வில்லும் மலரம்புகளும் மயிலிறகின் அடிக்குருத்துப் போன்ற புன்னகையும் நின் பூரண திருக்கோலமும் என்முன் நின்று காட்சியருள்வாய் அபிராமியே.

Tags:
Next Story
Share it