ஆச்சர்யம்! கீழடியில் மூடியுடன் முழு மண் பானை கண்டுபிடிப்பு!!

 | 

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய மண் பானை கண்டெடுக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை அங்கு ஐந்து குழிகள் தோண்டப்பட்டதில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், பகடை, கல்உழவு கருவி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில்  3ஆவதாக தோண்டப்பட்ட குழியில் ஒன்றரை அடி உயரம் கொண்ட மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சேதம் அடைந்த பானைகளே கிடைத்த நிலையில் தற்போது மூடியுடன் முழு பானை கிடைத்துள்ளது. பானையை உட்புறம் இறுக்கமாக மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பானையின் உள்ளே பொருட்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். உள்ளே பொருட்கள் இருக்கும் பட்சத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து தெரிய வர வாய்ப்புள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP