பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை !!

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை !!

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை !!
X

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் சோனியா குறித்து மூத்த பத்திரிகையாளர் அா்னாப் கோஸ்வாமி கடும் விமா்சனங்களை முன் வைத்தார். இதற்கு காங்கிரஸ் தலைவா்கள் சிலா் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.

பின்னர் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அா்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்னாப் மீதான காவல்துறை வழக்குப்பதிவு மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்ததோடு, அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மும்பை போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it