உச்சநீதிமன்றம் அதிரடி! பள்ளிகள் கல்விக்கட்டணத்தை குறைக்க உத்தரவு!!

 | 

தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு வகையில் செலவுகள் குறைந்துள்ளதால், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வியைப் பயின்று வருகின்றன. ஒன்று முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது.

ஆனால்,  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை என்பதால் பெற்றோர் கல்விக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் இயங்கினால் பராமரிப்பு, மின்சாரம், வாகன செலவுகளுக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் இயங்காத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள நடைபெறுகின்றன.

 எனவே பராமரிப்பு, மின்சாரம், வாகனம் செலவுகள் இல்லை என்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனிடையே ராஜஸ்தானில் சிபிஎஸ்இ பள்ளிகள் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP