1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் சிம்பு குரலில் வெளியான 'சூப்பர் ஸ்டார்' பாடல்!

வைரலாகும் சிம்பு குரலில் வெளியான 'சூப்பர் ஸ்டார்' பாடல்!


ப்ரெண்ட்ஷிப் படத்திற்காக நடிகர் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. கொரோனா காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like