சூப்பர்… வாவ்…! வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு!!

 | 

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாகக் கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அதாவது கடந்த ஜூலை 6ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அனைத்து அரசு வேலைகளிலும் பொதுப் பிரிவிலும் சரி, இதர பிரிவுகளில் சரி திருநங்கைகளுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தெரிவித்தது.

karnataka-high-court

அரசு வேலை தொடர்பான விண்ணப்பங்களில் ஆண், பெண் பிரிவுகளுடன் 'மற்றவர்கள்' என்ற பிரிவு இருக்கும். வேலைக்குத் தேர்வு செய்யும் முறையில் திருநங்கைகளுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

karnataka-high-court

கர்நாடகா அரசின் நடவடிக்கை அரசு வேலைகளில் சேர்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றாலும் கூட மற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என தொண்டு நிறுவன தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்

இது தொடர்பாகத் தனியாக வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய உயர் நீதிபதிகள், கர்நாடக அரசின் நடவடிக்கையைப் பாராட்டினர்இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP