கொரோனா நோயாளி மருத்துவமனை கழிவறையில் தற்கொலை!

கொரோனா நோயாளி மருத்துவமனை கழிவறையில் தற்கொலை!

கொரோனா நோயாளி மருத்துவமனை கழிவறையில் தற்கொலை!
X

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார்.

அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (54) சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், கடந்த 15ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனி வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார்.


இரண்டு நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென மருத்துவமனை கழிவறையில் ராஜசேகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மருத்துவ பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

newstm.in

Next Story
Share it