திடீரென பிங் நிறத்தில் மாறிய ஏரி... இந்திய ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி !

திடீரென பிங் நிறத்தில் மாறிய ஏரி... இந்திய ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி !

திடீரென பிங் நிறத்தில் மாறிய ஏரி... இந்திய ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி !
X

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லோனார் ஏரி திடீரென பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறத்தில் மாறியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது லோனார் ஏரி. இந்த ஏரி கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் பூமியைத் தாக்கியதால் ஏற்பட்ட பள்ளத்தால் உருவான ஏரி என்று நிலவியல்வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும் இந்த லோனார் ஏரி திடீரென பிங்க் நிறத்தில் கடந்த சில நாட்களாக மாறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அச்சமும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து புல்தானா மாவட்ட ஆட்சியர் சுமந்த் ராவத் சந்திரபோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஏரி குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “ உலக அதியசமாகத் லோனா ஏரி இ்ப்போது மாறிவிட்டது.

பாசிகளால் பச்சை நிறத்தில் இருக்கும் ஏரி பி்ங்க் நிறத்துக்கு மாறிவிட்டது. மைக்ரோபயாலஜிஸ்ட்கள் இதற்கு காரணம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புவியியல் வல்லுநர்கள் சார்பில் கூறுகையில், லோனா ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்குமுன்பும் மாறியுள்ளது என்றாலும் பிங்க் நிறத்தில் முழுமையாக மாறியுள்ளது இதுதான் முதல்முறை. மேலும் இந்த நீரில் இருக்கும் பாசிகள், மற்றும் உப்புத்தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்துவிட்டதால், லோனார் ஏரியில் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால், மழைநீர் சேராததால் உப்பின் அளவு அதிகரித்து இதுபோன் பிங்க் நிறமாக மாறியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

newstm.in 

Next Story
Share it