இளம் நடிகர் திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

 | 

நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர்,மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். சினிமாவிலும் கவனம் செலுத்திய இவர், வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 


நேற்று இரவு சென்னையிலுள்ள தனது வீட்டில் இருந்த சேதுராமனுக்கு  மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு மனைவி உமையாள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.சேதுராமன் இறந்ததை நடிகர் சதீஷ், தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், 'நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என பதிவிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP