1. Home
  2. தமிழ்நாடு

”ஸ்டாலினை கிண்டல் செய்த , சுடல மீம்ஸ்” சன் டிவியில் ஒளிபரப்பு !! 5 பேர் டிஸ்மிஸ்..

”ஸ்டாலினை கிண்டல் செய்த , சுடல மீம்ஸ்” சன் டிவியில் ஒளிபரப்பு !! 5 பேர் டிஸ்மிஸ்..


தமிழகத்தின் முன்னணி ஊடகம் சன் நியூஸ் தொலைக்காட்சி. தமிழ் செய்தி தொலைக்காட்சியின் முதல் நியூஸ் சேனல் சன் நியூஸ். திமுக ஆதரவு பெற்ற சேனல். அதன் உரிமையாளர்கள் கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் என்பது அனைவருக்கும் தெரியும். சன் குழுமம் மற்ற மாநிலங்களிலும் அந்த மொழிக்கேற்ப , தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறது.

”ஸ்டாலினை கிண்டல் செய்த , சுடல மீம்ஸ்” சன் டிவியில் ஒளிபரப்பு !! 5 பேர் டிஸ்மிஸ்..

இப்போது அந்த தொலைக்காட்சியின் முழு கட்டுப்பாடும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மு.க ஸ்டாலினை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் உலா வந்த மீம்ஸ் , அந்த தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர் உள்ளிட்ட 5 பேரை வீட்டுக்கு துரத்தி அடித்து இருக்கிறது. அந்த தொலைக்காட்சியில் ஒரு டிரெண்டிங் மீம்ஸ் என்று ஒரு கேலி, கிண்டல் பகுதியை ஒளிப்பரப்படும் அதில், ஸ்டாலினை கிண்டலடித்து ஒரு மீம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் வீட்டில் இருக்கச் சொல்கிறது. ஆனால் சுடல தரும் ஒரு கோடிக்கு வீட்டை விட்டு மக்கள் வெளி வருகின்றனர் என்பதை கிண்டல் செய்வது போன்ற ஒரு மீம். இந்த மீம் கலாட்டா எப்படியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த தகவல் உடனடியாக மு.க ஸ்டாலினுக்கு போக அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் , அப்போது பணியில் இருந்த 4 ஊழியர்களை வெளியே தள்ளி சொல்ல இருக்கிறார் ஸ்டாலின்.

அவர்கள் 5 பேரும் வீட்டுக்கு துரத்தப்பட்டு உள்ளனர் எடிட்டர் மீது கடும் கடுப்பில் இருக்கும் ஸ்டாலின் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தே விட்டாராம். செய்தி ஆசிரியரை தூக்கு என்று உச்சக் கட்ட கோபத்தில் கலாநிதி மாறனுக்கு போன் போனதாம். எந்த மறுப்பும் இல்லாமல், 5 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

Trending News

Latest News

You May Like