அடுத்தடுத்து நடந்த நிலநடுக்கம் !! பீதியில் மக்கள்

அடுத்தடுத்து நடந்த நிலநடுக்கம் !! பீதியில் மக்கள்

அடுத்தடுத்து நடந்த நிலநடுக்கம் !! பீதியில் மக்கள்
X

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 7:40 முதல் நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவில் 4.5 ஆன காணப்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் கூறியது. நிலநடுக்க மையப்பகுதி ராஜ்கோட்டின் தென்மேற்கில் 22 கி.மீ தூரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை போன்று அசாமிலும் நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவானது. காலை 7:57 மணிக்கு அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

இதே போன்று அதிகாலை 4:47 மணிக்கு இமாச்சல பிரதேச மாநிலத்தில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த மாதத்தில் முன்னதாக மேற்குவங்கம், குஜராத் மாநிலங்களில் நிலநடுக்கம் பதிவானது. தொடரும் நிலநடுக்கங்களினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it