அசத்தல்! டேங்கர்களை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!!

 | 

ராணுவ டேங்கர்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் இந்திய விமானப்படை தளத்தின் மீது சமீபத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ டேங்கர்களுக்கு எதிரான சிறிய வகை ஏவுகணை தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

drdo 1

இந்த சிறிய வகை ஏவுகணையானது எதிரியின் ராணுவ டேங்கர்களை துல்லியமாக தாக்கும் வல்லமைகொண்டது.  மேலும் இது குறைந்த எடை கொண்டது என்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

இதே போல, மேம்படுத்தப் பட்ட ஆகாஷ் ஏவுகணை ஒடிசாவில் பரிசோதிக்கப் பட்டுள்ளது. இந்த இரு பரிசோதனைகளும் வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP