மாணவர்களே இந்த இணையதளங்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.. நாளை உங்களுக்கான நாள் !!

 | 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 20 சதவீதம், 12-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அந்தவகையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் நாளை (ஜூலை) 19ஆம் தேதி காலை 11 மணிக்கு http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in இணையதளங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதைப்போல மாணவர்கள் பள்ளியில் சமர்பித்த அலைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22.07.2021 அன்று காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP