என்.எல்.சியை முற்றுகையிட்டு போராட்டம்! காவல்துறையினர் குவிப்பு!!

என்.எல்.சியை முற்றுகையிட்டு போராட்டம்! காவல்துறையினர் குவிப்பு!!

என்.எல்.சியை முற்றுகையிட்டு போராட்டம்! காவல்துறையினர் குவிப்பு!!
X

நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையான  பாதுகாப்பு தராமல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படுகிறது என்றும், அனல் மின் நிலையம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தினர். மேலும் உயிரயிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அனல்மின் நிலையம் அருகே தொழில்பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

Next Story
Share it