1. Home
  2. தமிழ்நாடு

வலுப்பெறும் விமானப்படை.. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி !!

வலுப்பெறும் விமானப்படை.. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி !!


நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து புதன்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

கட்டளை பிறப்பிப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத் தொடா்பு அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிலப்பரப்பில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில், இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இயங்கியது உறுதிசெய்யப்பட்டது.

இந்த ஏவுகணையை இந்திய விமானப் படையில் சோ்த்ததும், அதன் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வலுப்பெறும் விமானப்படை.. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி !!

ஆகாஷ் ஏவுகணை(ஆகாஷ்-என்.ஜி.), நிலத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது.

அதேபோல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் இலகு ரக ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. கையில் எடுத்துச் செல்லக் கூடிய லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணை ‘ஏவப்பட்டது. பீரங்கி போன்று உருவாக்கப்பட்டிருந்த இலக்கை, இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.

இதன் மூலம் குறைந்த தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like