சாலையில் பட்டா கத்தி , அரிவாளுடன் சுற்றிய ரவுடிகள் !! 2 வாலிபர்கள் கொலை !! வெளியான வீடியோ...

சாலையில் பட்டா கத்தி , அரிவாளுடன் சுற்றிய ரவுடிகள் !! 2 வாலிபர்கள் கொலை !! வெளியான வீடியோ...

சாலையில் பட்டா கத்தி , அரிவாளுடன் சுற்றிய ரவுடிகள் !! 2 வாலிபர்கள் கொலை !! வெளியான வீடியோ...
X

புதுச்சேரி அடுத்த பிள்ளையார்குப்பம பகுதியை சேர்ந்த இளைஞர் அருளுக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.  

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முரளி உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் புதுநகர் பகுதிக்கு சென்றது. அப்போது அங்கிருந்த அருள் தரப்பினர் முரளியுடன் வந்தவர்களை கட்டை மற்றும் கற்களால் தாக்கத் தொடங்கினர்.

இந்த மோதலில் முரளி மற்றும் அவரது நண்பர் சந்துரு இரண்டு பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இருவரது உடலையும் கைப்பற்றிய வில்லியனூர் போலீசார் இது குறித்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலை சம்பவத்திற்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட ரவுடிகள் கையில் அறிவால் மற்றும் பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு பிள்ளையார்குப்பம் பகுதியில் ஊரில் சுற்றித்திரிந்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it