1. Home
  2. தமிழ்நாடு

வித்தியாசமான முறையில் , கள்ளச் சாராயம் விற்ற பாட்டி கைது !!

வித்தியாசமான முறையில் , கள்ளச் சாராயம் விற்ற பாட்டி கைது !!


கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த விமலா என்ற 65 வயது மூதாட்டி , ராம்ஜிநகர் பகுதியில் டீ கேனில் கபசுர குடிநீர் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.

விற்கும் பகுதிக்கு போலிஸ் மாற்று உடையில் சென்று விசாரித்ததும் குடிமகன்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் டிக்-டாக் வீடியோ பார்த்து சென்னையில் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர், தேனாம்பேட்டை திரு.வி.க குடியிருப்பைச் சேர்ந்த இருவர் பட்டை, நாட்டு வெல்லம், கடுக்காய் ஆகியவற்றை வாங்கி வந்து சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், ராஜா மற்றும் அவரது நண்பர் ஜார்ஜ் ஜோசப்-ஐ கைது செய்தனர். அத்துடன், அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Trending News

Latest News

You May Like