1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 15 ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து !! தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் ஜூலை 15 ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து !! தெற்கு ரயில்வே அறிவிப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இன்று வரை தமிழகத்தில் 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது. குறிப்பாக இதன் பாதிப்பு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகி இருந்தது. தற்போது மேலும் பல மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை மாதம் 15 ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. திருச்சி - செங்கல்பட்டு , மதுரை - விழுப்புரம் , கோயம்புத்தூர் - காட்பாடி , கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ,

திருச்சி - நாகர்கோயில் , கோயம்புத்தூர் - அரக்கோணம் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Newstm.in

Trending News

Latest News

You May Like