"பொருளாதாரத்தை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள்" : மத்திய அமைச்சர் உறுதி!

"பொருளாதாரத்தை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள்" : மத்திய அமைச்சர் உறுதி!

பொருளாதாரத்தை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள் : மத்திய அமைச்சர் உறுதி!
X

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

‘இந்தியா புத்தாக்க யோசனைகள்’ என்ற பெயரில் தொடங்கிய இணையவழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகா்வு அதிகரித்துள்ளது என்றும், மாநிலங்களுக்கு உள்ளேயும், இடையேயும் சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் உற்பத்தித் துறை வளா்ச்சி கண்டு வருகிறது, சில்லறை பணப் பரிவா்த்தனைகளும் அதிகரித்துள்ளன என்றார். இவை அனைத்தும், நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதையே காட்டுகின்றன என்று அவர் கூறினார். நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீட்சி பெறுவதற்கு வரும் நாள்களில் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it