எங்கே போகிறது தமிழகம்? 

பொழுது போக்க வேண்டும் என்றால், இதை விட தரமாக படம் எடுக்கலாம். இதை கண்டிக்காவிட்டால் யதார்த்தமான திரைப்படம் என்ற பெயரில் ஜட்டி பனியன் கூட இல்லாமல் வெளி வரக்கூடும்; நாமும் பார்த்து ரசித்து தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்போம்.
 | 

எங்கே போகிறது தமிழகம்? 

இந்தியாவில், பொது இடத்தில் பிஸ் அடிக்கலாம்; ஆனால், கிஸ் அடிக்க கூடாது’ என்பது வெளிநாட்டினரின் விமர்சனம். இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், எது தங்களின் கலாச்சாரத்தை  பறி போக செய்துவிட்டது என்று அலறுவார்கள் என்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை.

‛எடிட் செய்யாமல் 2 சினிமாவிற்கு அனுமதி தாருங்கள், நான் தமிழகத்தையே  மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார் அண்ணா. அந்த அளவுக்கு வலிமயான ஆயுதமான சினிமா, தற்போது தமிழர்களை கூட்டி செல்லும் இடம் அதிபயங்கரமாக இருக்கிறது.

அப்பொதெல்லாம் விடலைகளின் காமத்தின் ஒரு வடிகால் ‛பிட்டு’ படம் பார்க்கிறது மட்டும்தான். அஞ்சரைக்குள்ள வண்டி, அவளோட ராவுகள், டியூசன் டீச்சர் போன்றவை, தமிழத்தில் சக்கை போடு போட்ட படங்கள். இது, அது மாதிரியான படம் என்று தெரிவதால் பெண்கள் அந்த பக்கம் தலைவைக்க கூட மாட்டார்கள்.

எங்கே போகிறது தமிழகம்? 

அதே போல இளைஞர்களும் அடையாளம் தெரியாமல், படம் போட்ட பிறகு, தியேட்டருக்கு பிட்டு முடிந்தபின்னர் இருளிலேயே தட்டு தடுமாறி வெளியேறி விடுவார்கள். இது .போன்றவை, சதைப்படங்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. சமுதாயப் படங்களாக பார்க்கவில்லை.

இதனால், அவை சமூதாயத்தில் எவ்விதமா தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை.  இன்றைக்கு சமூக ஊடகங்களில், டிக் டாக் போன்ற செயலிகளில், தங்களை யார் என்று தெரியாது என்ற ஒரு காரணத்தால், தமிழச்சிகள் தங்களின் வக்கரங்களை அள்ளி கொட்டி வருகிறார்கள்.

சமுதாயம் முழுவதும் ஆபாசம் ததும்பி நிற்கிறது. கூகுளில் எந்த உறவு முறையை குறித்து தேடினாலும் அது தொடர்பான ஆபாசக் கதைகள் தான் வந்து விழுகின்றன.

இந்த சூழ்நிலையில் மாய வலை என்று விவரிக்கும் சினிமாவும், அதில் வீழ்ந்துவிட்டது தான் கொடுமையிலும் கொடுமை. ‛இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று கடந்த ஆண்டு ஒரு படம் வெளிவந்தது. அப்போதே இது விவாத்தை அள்ளி கொட்டியது.

இந்நிலையில் கடந்த 2 நாளைக்கு முன்பு, நடிகை ஓவியா நடித்த, 90 எம்எல்( கட்டிங் அளவு) என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில் அவர் தண்ணீ அடிப்படி, கஞ்சா குடிப்பது, சக தோழிகளுடன் உடலுறவு குறித்து லேசாக மறைத்து பேசுவது என்று அள்ளிவிட்டு இருக்கிறார். பல லிப்லாக் சீன்களும் இடம் பெற்றுள்ளன.

எங்கே போகிறது தமிழகம்? 

இந்த படத்திற்கு ஏ சான்றிழ் கொடுத்தாலும், தொடர்ந்து பிட்டு பிட்டாக யூ டியூப் மூலம் வெளியே வரும். இதன் மூலம் இவர்கள் சமூதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள். இது பாடம் நடத்தும் படம் அல்ல, பொழுது போக்கு படம் என்பார்கள்.

பொழுது போக்க வேண்டும் என்றால், இதை விட தரமாக படம் எடுக்கலாம். இதை கண்டிக்காவிட்டால் யதார்த்தபடம் என்று ஜட்டி பனியன் கூட இல்லாமல் படம்  வெளிவரும்; நாமும் பார்த்து ரசித்து தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்போம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP