Logo

ஒரு ஸ்வாதியை இழந்து விட்டோம், மற்ற ஸ்வாதிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

2016 - ஜூன் 24, அது ஒரு வெள்ளிக்கிழமை காலை. 'மகேந்திரா டெக் சிட்டி'யில் உள்ள, 'இன்போசிஸ்' நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த ஸ்வாதி என்ற 24 - வயது பெண் வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
 | 

ஒரு ஸ்வாதியை இழந்து விட்டோம், மற்ற ஸ்வாதிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

2016 - ஜூன் 24, அது ஒரு வெள்ளிக்கிழமை காலை. 'மகேந்திரா டெக் சிட்டி'யில் உள்ள, 'இன்ஃபோசிஸ்' நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த ஸ்வாதி என்ற 24 - வயது பெண் வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தார். 

தினமும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து, மின்சார ரயிலில் பணிக்கு சென்று வந்த ஸ்வாதி அந்த வெள்ளிக் கிழமை காலை 6:30 மணிக்கு, வழக்கம் போல் அவரது தந்தை இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையம் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றுள்ளார். இரண்டாவது நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து, ஸ்வாதி ரயிலுக்காக காத்திருந்தார். 'இன்னைக்கு ஒரு நாள் தான் ஆஃபிஸ், அப்புறம் 2 நாள் லீவு' என சராசரி அலுவலக பணியாட்களைப் போல் ஸ்வாதிக்குள்ளும் அந்த 'வீக் எண்ட் மோட்' வந்திருக்கக் கூடும். அடுத்து நடக்கப் போகும் அசம்பாவிதம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள அவர் முற்பட்டிருக்கக்கூடும்.  

அப்போது சுமார் 25 - வயது மதிக்கத்தக்க இளைஞன் அருகே வந்து பேச்சுக் கொடுக்க, ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் இருக்கிறது. 'எப்படா டிரைன் வரும்' என நம்மைப் போல் தான் ஸ்வாதியும் யோசித்திருப்பார். ஆனால் அதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் தனது தோள் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்வாதியின் முகம், வாய், கழுத்து என சரமாரியாக வெட்டி விட்டு கை சொடக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறான் அந்த இளைஞன். 

ஒரு ஸ்வாதியை இழந்து விட்டோம், மற்ற ஸ்வாதிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்வாதியும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த கொலை சம்பவம், அங்கு இருந்தவர்களை உறைய வைத்தது. முக்கியமாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீசாரும் இல்லாததால், கொலையாளிக்கு தப்பிப்பது எளிதாக இருந்தது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன் (ஜூன் 24) இரண்டாண்டுகள் முடிவடைகிறது. இந்தக் கொலையை செய்தவர் திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

சரி அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.  

2016

ஜூலை 1: ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி என தகவல்

ஜூலை 2: நெல்லை, சென்னை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை

ஜூலை 5: புழல் சிறையில் ராம்குமார் அடைப்பு

ஜூலை 5: ராம்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்

ஜூலை 18: காணொலி காட்சி மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை

ஆகஸ்ட் 8: ராம்குமாரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

செப்.18:  சிறையில் மின் கம்பியைப் கடித்து ராம்குமார் தற்கொலை செய்ததாக அறிவிப்பு

செப். 20: ராம்குமார் பிரேதப் பரிசோதனை வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

அக். 1: எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை 

அக். 3: ராம்குமார் உடல் சொந்த ஊரில் அடக்கம்

2017

மார்ச் 7: ராம்குமார் உயிரிழந்ததால், வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.

கடைசியில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி, அதை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என இருவரின் மரணங்களும் மர்மமாகிப் போயின. 

கொலை நடந்த சமயத்தில் சரியான குற்றவாளி தப்பித்துப் போனதற்கு அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் இல்லை என்பதும், சம்பந்தப் பட்ட நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை என்பதும் மிக முக்கியக் காரணம். ஸ்வாதி கொலை நடந்ததும் உடனே அத்தனை ரயில் நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது. உடனே சொன்னபடி செய்திருப்பார்கள் என நினைத்துக்கொள்ள வேண்டாம். 

ஒரு ஸ்வாதியை இழந்து விட்டோம், மற்ற ஸ்வாதிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இது தான் இவர்களின் 'டக்கு'...

சென்னையில் மொத்தம் 4 ரயில் வழித்தடங்கள் உள்ளன. மேற்கே அரக்கோணம் வரை, தெற்கில் செங்கல்பட்டு - காஞ்சிபுரம், வடக்கே கும்மிடிப்பூண்டி மார்க்கம் என மூன்று முக்கிய ரயில் வழித்தடத்துடன், கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவை என மொத்தம் 4 வழித்தடங்கள் செயல்படுகின்றன. இதில் ஒரு நாளைக்கு சுமார் 4.5 லட்சம் பேர் ரயில் பயணம் மூலம் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்று வருகிறார்கள்.

அதிகாலையில் போவதிலும், பின்னிரவு வீடு திரும்புவதிலும் பெண்களும் அதிகம். இந்த மாதிரியான நேரத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் நிறைய உள்ளன. பெண்களுக்கான தனிப்பெட்டியில் ஏறி பிரச்னை செய்ய யாரும் தயங்குவதில்லை. ஸ்வாதி கொலை நடந்ததும் இரவு 7 மணிக்கு மேல், பெண்கள் பெட்டியில் பெண் காவலர்கள் பணியில் இருப்பார்கள் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது, இப்போது வரை அதை செயல்படுத்தவே இல்லை. 

சென்னை கோட்டத்தில் மொத்தம் 82 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 7 ரயில் நிலையங்களில் இன்டெக்ரேடட் சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன. பெண்கள் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதியில் மொத்தம் 82 கோடி  ரூபாயை ஒதுக்கியது தென்னக ரயில்வே. அந்த நிதி ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி. இதில் சென்னை கோட்டத்திற்கு மட்டும் 40 கோடி ஒதுக்கப் பட்டது. ஸ்வாதி கொலை நடந்த இந்த இரண்டாண்டுகளில் சமீபத்தில் தான் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இடையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பொருத்தியிருக்கிறார்கள். பறக்கும் ரயில் வழித்தடத்தில் எங்குமே ஒரு கேமரா கூட இல்லை. இன்னும் சொல்லப் போனால் ரயில் நிலைய படிக்கட்டுகளில் மின் விளக்குகள் கூட இல்லை. 

ஆக, 82 ரயில் நிலையங்களில் தற்போது வரை 9-ல் மட்டுமே சி.சி.டி.வி கேமராக்கள் இயங்குகின்றன. இன்னும் 73 நிலையங்களுக்கு எப்போது பொருத்தப் போகிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் இங்கு மனதளவிலும் உடலளவிலும் பலமானவர்கள் கிடையாது. தைரியமான பெண்களால் கூட இங்கு சில பிரச்னைகளை சமாளிக்க முடிவதில்லை. மற்ற நாடுகளைப் போல் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களை எல்லாம் யாரும் கேட்கவில்லை. அத்தியாவசிய தேவையான பாதுகாப்பை மட்டும் தான் எதிர் நோக்கியிருக்கிறார்கள். மறதி ஒரு தேசிய வியாதி இல்லை என்பதை இனியாவது நிரூபிப்பீர்களா ரயில்வே அதிகாரிகளே? 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP